Social advice Photos

Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts

business wars

1) *ஏறுதழுவல்* = வீரியமான காளைகளை தேர்வு செய்யும் முறை.
2) *முளைப்பாரி* = வீரியமான விதைகள் தேர்வு செய்யும் முறை.
3) *சேவல் மோத விடும் சண்டை* = வீரியமான கோழிகளை தேர்வு செய்யும் முறை.
4) *கிடாய் ஆடு மோத விடும் சண்டை* = வீரியமான ஆடுகளை தேர்வு செய்யும் முறை.
அனைத்திற்கும் தடை காரணம் யார்?...
*சேவல் சண்டைக்கு தடை* = அன்னிய பிராய்லர் கோழி+உற்பத்தி கருவி+ஸ்டெராய்டு ஊசி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.
*நாட்டு நாய் மையம் தடை+கருத்தடை* = அன்னிய நாய்+ நாய் உணவு+நாய் மருந்துகள் அன்னியனின் வர்த்தகம்.
*பசுமைப் புரட்சி நம் நாட்டு விதைகள் அழிப்பு* = விதையில்லாத விவசாயம்+நெல்+செயற்கை இரசாயன உரம்+ உற்பத்தி கருவி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.
*தென்னை, பனை மரங்கள் கள் இறக்க தடை+ அழிப்பு* = கோக்+ பெப்சி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.
*ஏறு தழுவுதல் தடை* = சினை ஊசி+பால்+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.
*பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி* என்று பல போலி புரட்சிகள் செய்து நமது தற்சார்பு முறைகள் அனைத்தையும் அழித்து அன்னிய கார்பரேட் நிறுவனத்திற்கு நம்மை அடிமை படுத்தவே இத்தடைகள்....
*சித்த மருத்துவம்* = மூலிகைகளை கொண்டு உடலுக்கு கேடு விளைவிக்காத மருந்து தயாரிப்பு செய்து நோய்களை குணப்படுத்தும் முறையை அழித்து ரசாயனம் கலந்த கலவையை மருந்து என்று நம் தலையில் கட்டி விட்டார்கள்...
*மூலிகைகளையும் இன்று பரிமாண வளர்ச்சி என்று நாமே நம்மை அறியாமல் அழித்து விட்டோம் என்பதே உண்மை....*
இனியாவது விழித்துக் கொள்வோம்...
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...

கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்

சீமை கருவேலமரம் விழிப்புணர்வு பாடல்
எமது நோக்கத்தையும், செயல்களையும் உடன் இணைத்துள்ளோம். இந்த இயக்கத்தில் பல்லாயிரம் நபர்கள் இருக்கின்றீர்கள். இதுவாரை யார் யார் என்ன அளவில் பங்கெடுத்துள்ளீர்கள் என்பதை நீங்களே அறிவீர்கள்.
நாங்கள் யாரையும் வற்புறுத்தாமல், நன்கொடைக்காக நம்பியிராமல் எடுத்த பணியினை தொடர்ந்துகொண்டுள்ளோம்.
எங்கள் செயல் இந்த பூமிக்கனது. உழவர்களுக்கானது. ஒரு காலத்தில் சாத்தியமில்லை, முடியாது, வாழ்வாதாரம் என்றெல்லாம் கூறி எம்மை பைத்தியகாரர்களாக பார்த்த சமூகத்தில் தொடர்ந்து களப்பணி, விழிப்புணர்வு செய்து அரசியலாகவும், சட்டப்படியும் பெரும் மாற்றத்தை எமது இயக்கம் செய்துள்ளது என்பதை பெருமையோடு பதிவு செய்கின்றோம்.
உங்களால் எல்லாவகையிலும் துணை நிற்க முடியாவிட்டாலும் இந்த காணொளியை உலகமெல்லாம் கொண்டுபோய் சேர்த்து இன்னும் இத்திட்டத்தை எதிர்க்கும், இயலாமை பேசும் மக்கள் மனத்தில் மாற்றத்தை கொண்டுவரவேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
- சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்
தமிழ்நாடு
www.aaproject.org

juliflora

சீமைக் கருவேலம் என்றும், வேலிக்காத்தான் என்றும் பரவலாக அறியப்படும் இது வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோராProsopis juliflora என்பதாகும். இதை எசுப்பானிய மொழியில் bayahonda blanca எனக் கூறுவர். மெக்சிகோ, கரிபியன் தீவுகள் மற்றும்தென் அமெரிக்கா போன்றவற்றை தாயகமாகக் கொண்ட இவை, ஆசிய, ஆசுதிரேலியக் கண்டங்களில் மிகப்பெரும் நச்சுக் களைத் தாவரமாக உருவெடுத்துள்ளது. பயிர்களுக்கு வேலியாகவும் சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950களில் ஆசுத்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த அறுபது ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. இந்த முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும் வைக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இவை வேறோடு பிடுங்கியெறியப்பட்டு இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில், இவை விளை நிலங்களில் 25 விழுக்காட்டிற்கு மேல் வளர்ந்து வேளாண்மையே தொடரா வண்ணம் நிலத்தைப் பாழ்படுத்தியிருக்கிறது. இதனைக் களைய பல அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.குறிப்பாக சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் எனும் மக்கள் அமைப்பு தீவிரமாக இம்மரங்களை வேரோடு அகற்றிவருகிறது. தமிழக அரசிடம் இம்மரங்களை தடை செய்யக்கோரியும் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இவை ஆழ வேர் மட்டுமில்லாமல் உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் செல்வதை தடைசெய்கிறது. எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு. இவை வாழும் இடத்தில் உற்பத்தி செய்யும் நச்சுப்பொருளால் நிலத்தில் பிற செடிகள் வளர்வதை அறவே தடுக்கிறது. வறட்சி காலங்களில் நிலத்தடி நீரை இம்மரம் உறிஞ்சிவிடுவதால் மற்ற தாவரங்களுக்கு போதிய நீர் கிடைப்பதில்லை. இவை நிலத்தில் பிற செடிகள் வளர்ப்பைத் தடுக்கிறது. நிழல் மரமாகவோ, கனி மரமாகவோ, கதவு சன்னல் என்று பயன்பாட்டிற்குரிய பொருள்களைச் செய்வதற்கோ எவ்வளவு பசுமையான தழையாக இருந்தாலும் அடியுரமாக இடுவதற்கோ, குறைந்தபட்சம் பறவைகள் அமர்ந்து கூடு கட்டுவதற்குக்கூட வேலிக்காத்தான் பயன்படுவதில்லை. இவைகளால் ஏற்படும் பாதிப்பு அளவிட முடியாதது. பல்லாயிரம் பறவைகளின் சரணாலயமாகத் திகழும் வேடந்தாங்கல் ஏரியில் செழித்து வளர்ந்த வேலிக்காத்தான், பருவ காலத்திற்கு வந்து அந்த ஏரியில் நீந்த முனைந்த வெளிநாட்டுப் பறவைகளையெல்லாம் குத்திக் கிழித்துக் கொன்று, பின்பு வனத்துறையின் முயற்சியால் அந்த மரங்கள் பிடுங்கி எறியப்பட்டுள்ளன. காடுகளில் இந்த தாவரத்தின் இலைகளை உண்டு சமீபத்தில் யானைகள் இறந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த தாவரம் முழுமையுமே நஞ்சாக உள்ளது. சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் இந்த தாவரத்தை தடை செய்யக் கோரியும் உடனடியாக அகற்றக் கோரியும் மாநில அளவில் ஆர்பாட்டங்கள் , உண்ணாவிரதங்கள் , கோரிக்கை மனு அளித்தல் , உறுப்பினர்களைக் கொண்டு முதலமைச்சர் கவனத்திற்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை செய்துள்ளது. மேலும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு வட்டம், உஞ்சனை கிராமத்தில் சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியை நம்பி சுமார் 100 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரி கவனிப்பாரின்றி சீமைக் கருவேலம் மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால், நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சக்கூடிய இந்த சீமைக் கருவேலம் மரங்களால் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள விவசாயக் கிணறுகள் நீரின்றி வறண்டு விட்டதாக அந்தக் கிராம மக்கள் போராடியுள்ளனர். தமிழ்நாட்டில், மதுரை சம உரிமை அமைப்பு சார்பில், வைகை ஆறு, மதுரை கண்மாய்கள் மற்றும் தமிழக நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, நீதிபதிகள் இந்த மரங்களை அகற்ற உத்தரவிட்டனர். இவை நிலத்தில் நீரில்லாத போது, காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சுகின்றன,மேலும் கரியமில வாயுவை அதிக அளவில் வெளியிடுவதாலும் வளிமண்டலம் மாசுபடுகிறது. எனினும் தமிழக அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

http://aaproject.org

free idli

காசே இல்லாமல் சாப்பிடலாம் வாங்க வணக்கம் சொன்னா போதுமாம் !
வேலுார் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே
நிலையம் பக்கத்தில் உள்ளது ஹோட்டல் ஏலகரி. காலை ஏழு மணியில் இருந்து வயதானவர்கள், பெண்கள், மனநிலை சரியில்லாதவர்கள் என்று ஒரு பாவப்பட்ட கூட்டமே வந்து தங்களுக்கு பிடித்த இட்லி, பூரி, தோசை, புரோட்டா போன்றவைகளை வாங்கி உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு பின், கல்லாவில் உட்கார்ந்திருக்கும் கடை உரிமையாளர் நாகராஜிடம் 'காசுக்கு' பதிலாக வணக்கம் மட்டும் தெரிவித்துவிட்டு செல்கின்றனர்.
இது போக நகரசுத்தி தொழிலாளர்கள், கை வண்டி இழுப்பவர்கள் போன்ற எளிய தொழிலாளிகள் மற்றும் மாணவர்களுக்கு உணவு பண்டங்கள் பாதி விலைதான். மேலும் நாள் முழுவதும் கைக்குழந்தையுடன் பால் கேட்டு வருபவர்கள் கையில் காசு இருந்தால் கொடுக்கலாம் இல்லை என்றால் பாலை மட்டும் வாங்கிக் கொண்டு செல்லலாம்.
இந்த ஆச்சர்யத்தை நிகழ்த்திக் கொண்டு இருப்பவர் நாகராஜ். இதுதான் வாழ்க்கை என்று வாழும் இவரைப்பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாக பார்க்கலாம்.
ஏலகிரியில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவரான நாகராஜுக்கு ஏழாம் வகுப்பிற்கு மேல் படிப்பு வரவில்லை, குடும்பத்திற்கு பாரமாக இருக்கவேண்டாமே என்று எண்ணி ஓட்டல் தொழிலாளியாகப் போனார். நீண்ட காலம் ஓட்டல் தொழிலாளியாக இருந்ததினால் இந்த தொழில் அத்துப்படியாக, தனியாக ஓட்டல் துவங்கினார். ஹோட்டல் ஏலகிரியில் இட்லி, தோசை, பூரி, புரோட்டா, குஸ்கா என்ற எல்லாமும் ருசியாக கிடைக்கும்.
நாகராஜ் தானே கடைக்கு தேவையான தரமான உணவு பொருளை தேடி வாங்குவதாலும், அதனை தரமான முறையில் தயாரிப்பதாலும், நியாயமான விலையில் விற்பதாலும் நல்ல வியாபாரம் நடக்கும். வருடத்தில் 365 நாளும் இவரது கடை திறந்திருக்கும், இரவில் ஐந்து மணி நேரம் தூங்கும் நேரம் போக மீதம் இருக்கும் நேரம் முழுவதையும் கடையில்தான் செலவழிப்பார்.
இப்படியான சூழ்நிலையில்தான் ஒரு சம்பவம் இவரது கடைமுன் நடைபெற்றது. ரயில் பயணிகள் ஜன்னல் வழியாக காலி குடிநீர் பாட்டிலை தூக்கி எறிவதை போல ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அவ்வப்போது சிலரை தூக்கி எறியாத குறையாக ரயில்களில் இருந்து இறக்கிவிட்டு செல்வர். இப்படி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவும், அந்த பெண்களில் பெரும்பாலோனார் மனநிலை சரியில்லாதவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களை இப்படி கல்நெஞ்சத்துடன் இங்கே இறக்கிவிட்டவர்கள் ஊருக்கு போனதும் காணாமல் போனாதாக உறவுகளிடம் சொல்லி பொய்யாக தேடிக்கொண்டே இருப்பார்கள். இப்படி இறக்கிவிடப்படும் மன நோயாளிகளின் கதி என்ன? மன நோயாளிகள் ஒரு பாங்கையோ, நகைக்கடையையோ, ஜவுளிக்கடையையோ தாண்டி போகும்போது அவர்களிடம் எந்தவித சலனமும் ஏற்படாது, அதே நேரம் உணவு பண்டங்கள் விற்கும் ஓட்டலையோ அல்லது டீகடையையோ தாண்டிப்போகும்போது உடலும் உள்ளமும் பசி என்ற சலனத்தை ஏற்படுத்த கண்ணில் ஓர் ஏக்கத்துடன் அங்கேயே நின்றுவிடுவார்கள்.
என்னதான் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றாலும் பசி உணர்வு இருக்கத்தான் செய்யும், ஆனால் பசிக்குது என்று கேட்கத்தெரியாது. இப்படிப்பட்ட ஜீவன்கள் தனது கடையை ஏக்கத்துடன் பார்ப்பதை அறிந்ததும் பதறிப்போன நாகராஜ், அவர்களை அன்புடன் அழைத்து விருப்பப்பட்டதை சாப்பிடக் கொடுத்தார். நாகராஜ் கையால் நன்றாக சாப்பிட்டுவிட்டு கிடைத்த இடத்தில் தூங்கியவர்கள் மறுநாள் காலையிலும் வந்தனர்.
இந்த முறை வந்த போது தங்களுடன் மேலும் சிலரை கூட்டிக்கொண்டு வந்தனர். சந்தோஷத்துடன் எதிர்கொண்ட நாகராஜ் அனைவருக்கும் அன்புடன் உணவு வழங்கினார். இவர்களைப் பார்த்து சில முதியோர்களும் உடல் ஊனமுற்றவர்களும் கடைக்கு வர இப்படியாக கிட்டத்தட்ட தினமும் நூறு நூற்றைம்பது பேர் காலை உணவு சாப்பிட வாடிக்கையாக ஹோட்டல் ஏலகிரிக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
அவர்கள் பாட்டிற்கு வருவார்கள் குட்மார்னிங் போல நாகராஜ்க்கு ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு வேண்டியதை சாப்பிட்டுவிட்டு திரும்ப போகும்போது ஒரு வணக்கத்தை போட்டுவிட்டு போய்விடுவார்கள். இதே போல துப்புரவு தொழிலாளர்கள் போன்ற ஏழைத்தொழிலாளர்கள் மற்றும் சீருடையுடன் வரும் ஏழை மாணவர்களுக்கு பாதி விலையில் உணவு இதனால் இரண்டு இட்லி சாப்பிடுபவர்கள் நாலு இட்லி சாப்பிட்டு இன்னும் தெம்பாக, ஆரோக்யமாக இருப்பார்கள் என்பது நாகராஜின் நம்பிக்கை.
எப்படி இதெல்லாம் முடிகிறது என்ற போது எனக்கு பசியோட அருமை தெரியும் ஆகவே என்னால முடிந்த அளவு இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உணவு வழங்குகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக எனது இந்த காரியத்திற்கு பெரிதும் துணையாக இருப்பவர் என் துணைவியார் சுஜாதாதான் என்கிறார் பெருமையாக. அன்றாடம் எங்கள் வீட்டு அடிப்படை செலவிற்கு தேவைப்படும் பணத்தை தவிர மற்ற பணம் அனைத்தையும் இதற்கே செலவழித்து விடுகிறார்.
விசேஷ நாளில் வியாபாரம் நன்கு நடந்து கூடுதலாக லாபம் கிடைத்தால் அந்த லாப பணத்தில் பேனா, பென்சில் என்று வாங்கிக்கொண்டு போய் அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிவிட்டு வந்துவிடுவார். பணத்திற்காக வாழக்கூடாது என்ற கொள்கையில் இருவரும் உறுதியாக இருக்கிறோம், இன்னும் வருமானம் கூடுதலாக கிடைத்தால் மதிய உணவும், இரவு உணவும் கூட வழங்க எணணியுள்ளோம், கடையும், குடியிருக்கும் வீடும் வாடகைதான், பாங்க் இருப்பு எதுவும் கிடையாது, கால்பவுன் தோடும் மூன்று பிள்ளைகளும்தான் எங்கள் சொத்து.
எங்கள் பிள்ளைகளையும் மற்றவர்களுக்கு உதவும் வாழ்க்கைதான் வாழவேண்டும், ஒருக்காலத்திலும் பணத்தின் மீது ஆசை வைக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுத்து வளர்க்கிறோம். சுஜாதா ஒரு வேலைக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறார், வேலை கிடைத்ததும் அந்த சம்பளத்தில் நமது குடும்பத்தை நடத்திக்கொள்வோம், கடை வருமானம் முழுவதையும் ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்குவதிலேயே செலவழிப்போம் என்றும் சொல்லியுள்ளார்.
நாங்கள் செய்யும் இந்த காரியத்தை சேவை தொண்டு என்றெல்லாம் சொல்லி எங்களை பெருமைப்படுத்தி கொள்ள விரும்பவில்லை, பசிக்கும் சக மனிதர்களுக்கு செய்யும் சிறு உதவி அவ்வளவுதான் என்கின்றனர். கடையில் வேலை பார்ப்பவர்கள் பசியோடு வருபவர்களை அலட்சியப்படுத்தி விடக்கூடாது, அவமானம் ஏற்படும்படி பேசிவிடக்கூடாது என்பதற்காக எங்கு இருந்தாலும் காலையில் நாகராஜ் கடைக்கு வந்துவிடுவார்.
தானே அவர்களை வரவேற்று உணவு வழங்குவார். இதற்காக இவர் வெளியூருக்கும் தற்போது போவது கிடையாது, உறவு விசேஷம் என்பதைக்கூட இந்த நேரம் தாண்டிதான் வைத்துக்கொள்கிறார். உங்களோடு சேர்ந்து நாங்களும் சேவை செய்கிறோம் என்றும், ட்ரஸ்ட் ஆரம்பித்து முறைப்படுத்தி செய்யுங்கள் என்றும், எவ்வளவு பணம் வேண்டும் உங்களுக்கு மாதாமாதம் அனுப்புகிறோம் என்றும், நிறைய பேர் சொல்லி வருகிறார்கள் அதை அன்போடு மறுத்து விடுகிறோம்.
காரணம் நாங்கள் எங்கள் போக்கில் எங்கள் மனதிருப்திற்கு ஏதோ செய்கிறோம், பாராட்டு கிடைக்கும், பணம் கிடைக்கும்,உதவி கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்து செய்யவில்லை. ஆகவே எங்களுக்கு நல்ல ஆரோாக்கியமும், இதே போல நியாயமான வருமானமும் வந்தால் போதும் அதை தாண்டி மக்களோட ஆசீர்வாதம் மட்டும் போதும் என்று சொல்லும் இந்த நாகராஜ்.
இதையெல்லா எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இவர்களுக் கென்று தனியாக உலை வைக்கப்போதில்லை. வழக்கமாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக சமைக்கிறேன். 5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும் 10 கிலோ மாவு போட்டாலும் மாஸ்டருக்கு ஒரே கூலிதான். எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவாகிறது.
சில ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்புதான் என்றாலும் எனக்கு குடும்பம் நடத்தத் தேவையான லாபம் கிடைக்கிறது. மனதுக்கும் சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் ‘வாடி நிற்கும்' நாகராஜ்.
சுஜாதா தம்பதிகளை வாழ்த்த விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய
எண்: 9944565814.

Drawbacks of plastics

 ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.

- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே

- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. 
அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. 
ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்

பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?

சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை

அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.

Best Blog List - Links